உயர் தர மற்றும் பல்கலைக்கழக புவியியல் மாணவர்களுக்கான புறவிசை நிலவுருவங்கள் (பௌதிகப் புவியியல்) எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று (28.08.2018)மாவடிவேம்பு தவசி லேணிங் சிற்றி கல்விநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வி நிலைய ஆலோசகர் திரு. சி.தில்லையன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. க.சத்தியவரதன் (அதிபர், புலிபாய்ந்த கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), திரு. சி;சிறீதரன் (பிரதி அதிபர், செங்கலடி மத்திய கல்லூரி), திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திரு.தி.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி. வ.கமலநாதன்(ஆசிரியர்), திரு. ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), கணேஸ்பாபு(அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் கல்வி நிலைய நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் , பெற்றோர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலே புறவிசை நிலவுருவங்கள் , தரம் 9 புவியியல் ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டதுடன் கல்வித்துறை, வளிமண்டல அவதானிப்பு, பஞ்சாங்கக் கணிப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய. மூன்று மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.