தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
நிகழ்வுகள் நேற்று(09.11.2014) கல்வி நிலையத்தின் பணிப்பாளர் மா.சபாரெத்தினம்
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக திரு. ஆ.தேவராஜா
(தலைவர், சித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பு), திரு பூ.அருள்நாதன்
(மாவடிவேம்பு -02 கிராம உத்தியோகத்தர்), திரு. க.யோகநாதன் (சிரேஸ்ட வரலாறு
பாட ஆசிரியர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும்
திரு. சி.தில்லையன் (பிரதி பணிப்பாளர் - கல்வி, கல்வி நிலைய ஆலோசகர் ),
திரு. க. சிவாங்கன் (பிரதி பணிப்பாளர்- நிருவாகம்) , வி.எஸ்.அக்சயன்
(திட்டமிடல் பணிப்பாளர்) , சு.சுமன் (அலுவலக இணைப்பாளர்) மற்றும் தரம் 7 -
13 வரைய மாணவர்கள், பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது
கல்வி நிலையத்தில் கல்வி கற்று பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற
மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பசுமை எனும் வருடாந்த
சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றது.
மேலும்
இந்நிகழ்வில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது. அந்தவகையில் கல்வி
நிலைய படிப்பகத்திற்கு பல உதவிகள் புரிந்த திரு. ஆ.தேவராஜா, கிராமத்திற்கு
சேவை புரிந்த பூ.அருள்நாதன் , ஆசிரியர் திரு.க. யோகநாதன் ஆகியோருக்கு
நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.