சித்தாண்டி
- மாவடிவேம்பு, தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் இன்று (08.10.2014)
ஆசிரியர் தினமும் நூல்வெளியீடும் நடைபெற்றது. கல்வியகத்தின் அலுவலக
இணைப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கல்வி நிலைய பணிப்பாளர் அக்சயன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,
வழிகாட்டியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் உயர்தர
புவியியல் மாணவர்களுக்குரிய விவசாயப் புவியியல் எனும் நூலும்
வெளியிடப்பட்டது.
இந்நகிழ்வில்
பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்
திரு. க.சூரியகுமாரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு. க.பகீரதன் (அதிபர்,
சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயம்), பொ.சின்னத்துரை (அதிபர்,
பெருமாவெளி ஶ்ரீ வாணி வித்தியாலயம்), திரு க.யோகராஜா (சேவைக்கால ஆலோசகர்), திரு. சு.சிவராசா (சேவைக்கால ஆலோசகர்) ,
திரு க.சத்தியகாந்தன் (ஆசிரியர்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருமதி
ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), திருமதி ப.பரமலிங்கம் (ஆசிரியர்), திருமதி
யோ.விஜயதாஸ் (ஆசிரியர்), திருமதி யோ.சூரியகுமாரன் (பொதுச்சுகாதார பரிசோதகர்
அலுவலகம்), திரு சி.தில்லையன் (ஆலோசகர், கல்வியகம்) ஆகியோரும் மற்றும்
பழைய மாணவர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.