பாசிக்குடாவிற்கான களச்சுற்றுலா - 01.05.2012

தவசி லேணிங் சிற்றி பிரதேசத்தில் உள்ள அரிய பல விடயங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், பாடவியடங்களுடன் சம்பந்தப்பட்டவற்றை தமது பிரதேசத்திலுள்ள வளங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவு படுத்தியும் வருகின்றது.
புவியியல் கற்கும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு பல களச்சுற்றுலாக்களை ஒழங்கபடுத்தி வருவதுடன், குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் புவியியல் சார்ந்த அம்சங்களுக்கான விளக்கங்களையும் அவ்விடத்திலேயே வழங்கி மாணவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில்  இக்களச் சுற்லாக்களில் ஆண்மாணவாகளையே அதிகளவில் உள்வாங்குவதுடன், தத்தமது துவிச்சக்கரவண்டிகளிலேயே இப்பயணங்களையும் அதிக செலவின்றி ஒழுங்குபடுத்துகின்றது. கடந்த 01.05.2012 அன்று கல்வி நிலையத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா நிகழ்வில்  மருதயடி நீரூற்று, சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்புக் கோபுரம், பாசிக்குடாவையண்டிய கடற்கரை நிலவுருவங்கள், ஆற்றுமுகம், முருகைக்கற்பாறைகள், சுற்றுலாத்துறைவிருத்தி முதலிய அம்சங்கள் அவதானிக்கப்பட்டது.
பாசிக்குடாவிற்கான களச்சுற்றுலாவில் கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையம்பலம் அர்களும், கல்வி நிலைய தலைமை ஆசிரியர் அக்சயன் மற்றும் புவியியலை பாடமாகக் கற்கின்ற ஆண்மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.




















Previous Post Next Post