வருடாந்த ஆசிரியர் தினம் - 2021

 தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் அக்‌ஷயன் அவர்களால் வருடாந்தம் தனக்கு கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள் மேலும் கலைகளைப் போதித்த ஆசிரியர்கள் முதலியோரை கௌரவிக்குமுகமாக வருடா வருடம் குறிப்பிட்ட சில ஆசான்களை கௌரவித்து சிறிய நினைவுச் சின்னமொன்றை வழங்கி நினைவுகூரப்படுகின்றது.  அந்தவகையில் சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர் 05 ஆம் திகதியன்று இவ்வருடத்திற்குரிய ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றது.


இவ்வருடத்தில்(2021) காணப்பட்ட கொரோனா அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட ஒன்றுகூடல் தடை காரணமாக ஆசிரியர் தின நிகழ்வுகள் ZOOM தொழினுட்பத்தின்  நிகழ்நிலை மூலமான  நிகழ்வாக நடைபொற்றது. இந்த நிகழ்வில் பொதுவாக கற்பித்த ஆசிரியர்களின் வீடுகளுக்கு எமது கல்வி நிலையத்திலிருந்து கல்வி நிலைய நிருவாகக் குழு உறுப்பினர்கள் நினைவுச் சின்னங்களுடன் சென்று உரிய வேளையில் நிகழ்வில் உரிய ஆசிரியர்களுடன் இணைந்திருந்தனர். நிகழ்வைத் தொகுத்து ஆசிரியர் அக்‌ஷயன் அவர்கள் நடாத்தியிருந்தார்.  

நிகழ்வுகளின்போது கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்.

திரு. J.P..Sivabalan ( இஷின்ரியு கராத்தே சர்வதேச கழகத்தின், பிராந்திய இணைப்பாளரும், முதன்மை பயிற்சி ஆசிரியரும்)

திரு. Dr. S.Umasankar. (ஆங்கில பாடத் துறைத்தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம்)

திரு. T.Suthagar  (ஓய்வுநிலை அதிபர்)

திரு. S.Sritharan (பிரதி அதிபர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்)






நிகழ்விற்கான யூடியுப் இணைப்பு 


Previous Post Next Post