01.09.2021- நிகழ்நிலை புத்தக வெளியீடு


தவசி லேணிங் சிற்றியின் நூல் வெளியீடுகளில் முதன்முறையாக  இணையவெளியில் ZOOM ஒன்றுகூடல் தொழினுட்பத்திற்கூடாக இன்று (01.09.2021) இரு புத்தகங்களின் வெளியீடு நடைபெற்றது.   கிரான் மத்திய கல்லூரியின் ஏற்பாட்டிலும் பாடசாலையின் அதிபர் திரு. மாணிக்கம் தவராஜா அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதிதிகளாக திரு. தி.ரவி (வலயக் கல்விப் பணிப்பாளர், கல்குடா கல்வி வலயம்) அவர்களும், திரு.க.சூரியகுமாரன் (முன்னாள் உதவிப் பணிப்பாளர், வளிமண்டலவியல் திணைக்களம்) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. பா.இன்பராஜ் (அதிபர்), திரு. ஜி.ஜி. அண்டனி வர்கீஸ், திரு. து.முரளிதரன் (அதிபர்), திரு. த.அகிலன் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்), திரு. சு.சிவராசா (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்), திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), சிரேஸ்ட புவியியல் ஆசிரியர்களும் கலந்துசிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில்  மற்றும் கிரான் மத்திய கல்லூரியின் பிரதிஅதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பரீனா ருசைக் மற்றும்  ச.அக்‌ஷயன் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இலங்கையின் பௌதிகப்புவியியல் என்ற நூலும், அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட சூழல் கல்வி என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


BOOK PUBLISHING YOUTUBE VIDEO





வெளியிடப்பட்ட புத்தகங்களின் மின்நூல்களைப் பார்வையிடுவதற்கு உரிய புத்தகங்களின் மீது சொடுக்குங்கள்.








Previous Post Next Post