கல்வி நிலைய ஆலோசகர் திரு. சி.தில்லையன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வடக்கு வாகரைக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ச.பரமேஸ்வரன் அவர்களும், கெளரவ அதிதிகளாக திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), திரு. த.கமலநாதன் (ஆசிரியர்), திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திரு. சு.சந்திரபோஸ் (ஆசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்விநிலைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.