சைவநெறி பாடத்திற்கான கருத்தரங்கு

தவசி லேணிங் சிற்றி கல்வி நிலையமானது இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான தடை உடைத்தல் எனும் பெயரில் ஒவ்வொரு பாடங்களுக்கும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 


அந்தவகையில் இன்று (01.11.2013) அன்று சைவநெறி பாடத்திற்கான கருத்தரங்கு நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தாண்டி - மாவடிவேம்பு நலன் புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், மாணவர்களுக்குரி கருத்தரங்கு கையேடுகளையும் வழங்கி வைத்தார்.

இன்றைய சைவநெறி பாட கருத்தரங்கு ஆரம்ப நிகழ்வில் கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன்,  கல்வி நிலைய போதனாசிரியர்களான சு.சுமதரன், நா.விமல் ஆகியோரும் மற்றும் தரம் 11 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கானது மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்பட்டதுடன், கருத்தரங்கின்போது கையேடுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.  மாரிமுத்தன் செய்திகள் ஊடக வலையமைப்பு  கையேடுகளுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. 

இரண்டாவதாக வரலாறு பாடத்திற்கான கருத்தரங்கு எதிர்வரும் 03.11.2013 அன்று நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் எதிர்வரும் 02.11.2013 பிற்பகல் 5.00 மணிமுதல் மறுநாள் (03.11.2030) காலை 8.00 மணிவரையில் தம்மைப் பதிவுசெய்துகொள்ளமுடியும்.





Previous Post Next Post