தவசி லேணிங் சிற்றியானது புவியியல் கற்கையில் பல்வேறு புதிய விடயங்களை உள்வாங்கி மாணவர்களின் கல்வியில் இலகு தன்மையினை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக கல்விச்சுற்றுலாக்கள், களச்சுற்றூக்கள், பல்லூடகத்தின் மூலமான கற்பித்தல் என பலவழிமுறைகளைக் கையாண்டு மாணவர்களுக்கு பாடவிடயங்களை இலகுவில் புரிந்துகொள்வதற்கு வழிசமைத்து வருகின்றது.
அந்தவகையில் முதன்முதலாக கடந்த 04.06.2013 அன்று பிற்பகல் தரம் 12, 13 மாணவர்களுக்கான தேசப்படம் எனும் புவியியல் பகுதி தொடர்பான கருத்தரங்கு பல்லூடகத்தின் உதவியுடன் நடாத்தப்பட்டது.
ஒரு சில நாட்களுக்கு கற்பித்தல் செயன்முறையினை மேற்கொள்வதற்கு சித்தாண்டி நலன்புரி அமைப்பின தலைவர் ஆ.தேவராசா அவர்கள்ஒழுங்குபடுத்தி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது கல்வி நிலையத்தின் சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.