தவசி லேணிங் சிற்றி - கல்வி நிலையமானது கடந்த 24.06.2013(ஞாயிற்றுக்கிழமை) விளைநிலப் பகுதிகளை அதிகளவில் கொண்ட ஈரளக்குளம் பிரதேசம் சார்ந்த பிரதேசத்திற்கான களச்சுற்றுலாவினை மேற்கொண்டிருந்தது.
கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுலாவில் தரம் 9 - 13 வரையிலான ஆண் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
போக்குவரத்துச் செலவினை இழிவளவாக்கும் முகமாக துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை சார்ந்த குன்று மலை சார்ந்த அம்சங்கள், ஆறுகள், தாவர வகைகள், குடியிருப்புகள் மற்றும் நீர்ப்பாசன அம்சங்கள் இக் களச்சுற்றுலாவின்போது பார்வையிடப்பட்டன.
சுற்றுலாவின்போது அவதானித்த முக்கிய அம்சங்கள்.
1. கிரான் பாலம் மற்றும் தொடர்படைய நதிகள்.
2. வெள்ளாமைச்சேனை சாய்வு நீரூற்று(கிணறு)
3. வள்ளி ஆறு (மியான்கல் ஆற்றின் பகுதி)
4. லாவாணை ஆறு (முந்தணி ஆற்றின்பகுதி)
5. மயிலவட்டவான் ஆறு (முந்தணி ஆற்றின்பகுதி)
6. கடைசிமலை (வெளியரும்புப் பாறை)
7. ஈரளக்குளம் அம்மன் ஆலயம்
8.வெட்டு வாய்க்கால்