உறுகாமம் குளத்திற்கான களச்சுற்றுலா - 20.01.2013

சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமான தவசி லேணிங் சிற்றி நேற்றைய தினம் (20.01.2012) உறுகாமம் குளம் பார்வையிடுவதற்கான களச்சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
கல்வி  நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன், கல்வி நிலைய கலாசார இணைப்பாளர் சி.சிவா, பழைய மாணவர் சங்க செயலாளர் , தரம் 9, 10, 11, 13 மாணவர்கள் முதலியோரும் கலந்துகொண்டனர்.



உறுகாமம் குளம் நோக்கிய சுற்றுலாவின்போது  உறுகாமம் குளத்தின் உறுப்புக்கள் பற்றி மாணவர்களுக்க போதிக்கப்பட்டதுடன், மேலதிக நீர் வழிந்தோடும் பகுதியிலுள்ள வடிச்சல் பகுதியில்  நதியினுடைய செயற்பாடுகள், வானிலையாலழிதல், மண் உருவாக்கம் முதலியனவும் உயர்தர புவியியல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் உறுகாமம் குளப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைமானி அளவிடல் பகுதிக்கு சென்று மழைமானி அளவீடு பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டது.

உறுகாமம் குளம் பார்வையிட்டதன் பின்னர் கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள குசலான் மலை எனும் முருகன் ஆலயம் உள்ள பகுதி மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் உறுகாமம் குளத்தினுடைய வடிச்சல் நீரில் பாதுகாப்பாக நீராடியதுடன், குசலான் மலையின் மீதும் ஏறுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

சித்ததாண்டி பிரதேசத்திற்க அடிக்கடி வெள்ளம் ஏற்படுத்துவதில் செல்வாக்கச் செலுத்துவது உறுகாமம் குளத்தினால் திறந்த விடப்படுகின்ற குளத்து நீராகும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனக் குளமாகவும் இது காணப்படுகின்றது. எனவே மேற்கூறிய இரண்டு விடயங்களையும் மையப்படுத்தியே இச்கல்விக் களச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்மாணவர்கள் மாத்திரம் கலந்துகொண்ட இச்சுற்றுலாவில் எதுவித பயணச் செலவுமின்றிய துவிச்சக்கர வண்டியே பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



























'கல்விக்குரிய எத்தனையோ அம்சங்கள் எமது மாவட்டத்திலேயே பரந்து கிடக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு போதிக்கின்றபோதே மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளவும் முடியும், எமது பிரதேசத்தின் பெருமையை அறிந்துகொள்ளவும் முடியும்'
Previous Post Next Post