மரம் நடுகை நிகழ்வு - 01.01.2013

சூழலின் நிலைப்பில் மரங்கள் பல்வேறுபட்ட விடயங்களுடன் முக்கியத்துவமுடையனவாகக் காணப்படுகின்றன.  அந்தவகையில் சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி நிலையமும் இன்று (01.01.2013)  மரநடுகை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.


புதுவருடத்தினை முன்னிட்டு இடம்பெற்ற இம்மரநடுகை நிகழ்வில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன், பழையமாணவர் சங்கத்தின் தலைவர் தீபன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சுமன் மற்றும் தரம் 13 மாணவர்கள், தரம் 11 பரீட்சை எழுதிய மாணவர்களும் கலந்துகொண்டனர். 

மரநடுகைக்காக சித்தாண்டியின் சின்னாளன் புளியடி குளப்பகுதி, சந்தணமடு ஆற்றினுடைய கரையோரம் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன.


















Previous Post Next Post