தவசி லேணிங் சிற்றியானது வருடா வருடா வருடம் கல்விச் சுற்றுலாவினை மாணவர்களின் புலக்காட்சியுடனான கற்பித்தலுக்கு உதவுமுகமாக ஒழுங்குபடுத்தி வருகின்றது. அந்தவகையில் 2012 ஆம் ஆண்டிற்குரிய கல்விச் சுற்றுலாவானது (06.04.2012 - 09.04.2012) மலையகத்தை அடிப்படையாகக் கொண்டதாக ஒழுங்குபடுத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கையின் வேறுபட்ட புவியியல் அம்சங்களான தரைத்தோற்றம், காலநிலை மற்றும் ஏணைய புவியியல் சார்ந்த விடயங்களையும் மாணவர்களுக்கு நேரடியான அனுபவத்தினை ஏற்படுத்துமுகமாக இந்தச் சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது.
இக்கல்விச் சுற்றுலாவினை கல்வி நிலையை தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தியதுடன், இச்சுற்றுலாவில் கல்வி நிலையத்தின் ஆலோசகரான சி.தில்லையன், சமூக இணைப்பளர் மா.சாந்தீபன், திட்டமில் இணைப்பாளர் க.சிவா, கல்விநிலைய அபிவிருத்திக்கு குழுவினர்களும் புவியியலை ஒருபாடமாகக் கற்கும் அனைத்து மாணவர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.
இக்கல்விச் சுற்றுலாவின்போது மாணவர்கள் ஆற்றுவடிநில நிலவுருவங்கள் (நீர்வீழ்ச்சி, பானைக்குழி, விரைவோட்டவாற்றுப் பகுதி, இணைந்தசுவடு, மலையிடுக்கு, ஆற்று ஓங்கல், பள்ளத்தாக்கு, ஆற்றுமுகம்), தேசப்பட அம்சங்கள் , காலநிலையின் வேறுபட்ட இயல்புகள், இயற்கைத்தாவர வகைகள் (அயனமழைக்காடு, மலைக்காடு, கலப்புக்காடு, புதர், புல்வெளி, கண்டல்), நகராக்கம், குடியிருப்பு, பயிர்ச்செய்கை முறைகள்(தேயிலை, இறப்பர், சேனைப்பயிர், கரும்பு, சிறுஏற்றுமதிப் பயிர்) போன்ற பல்வேறு புவியியல் விடயங்களை புலக்காட்சியினுடாக அவதானிக்க முடிந்ததுடன், கலாசார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற கதிர்காமம் முதலிய திருத்தலங்களையும் பார்வையிடமுடிந்தது.