தவசி லேணிங் சிற்றியின் கல்விச் சுற்றுலா கடந்த 21.04.2011 தொடங்கி 24.04.2011 வரையான கலப்பகுதியினுள் இடம்பெற்றது. இக்கல்விச் சுற்றுலாவின்போது மாணவர்களின் புவியியல், வரலாறு மற்றும் சமயரீதியிலான விடயங்கள் முக்கியமாக பார்வையிடப்பட்டதுடன், முழுமையாக கல்விநடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டிருந்தது.
சுற்றுலாவின்போது கல்வி நிலைய ஆசிரியர்கள், மற்றும் சமூக இணைப்பாளர், மற்றும் பெற்றோரும் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.
சுற்றுலாவின்போது கல்வி நிலைய ஆசிரியர்கள், மற்றும் சமூக இணைப்பாளர், மற்றும் பெற்றோரும் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.
கல்வி நிலையச் சுற்றுலாவின்போது பின்வரும் மாவட்டங்களுக்கூடாக பயணம் இடம்பெற்றிருந்தது. அதன்போது அப்பகுதிகளில் உள்ள முக்கியமான விடயங்கள் பார்வையிடப்பட்டன.
மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலநறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் சுற்றுலாவின்போது ஊடறுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவின்போது பல்வேறு வழிகளில் ஜி. இன்பகரன், து.வாசன், ரா.யசோதா, ம.அபினயா, கோ.ராஜா, பி.தயாளசீலன், பி.ஜெயசீலன், சு.தர்சன், செ.சந்திரகுமார், முருகன் ரவல்ஸ் ஆகியோர் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.