
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதன்மை அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஊடகத்துறையில் சேவையாற்றி வரும் பிரதேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு. ந.நித்தியானந்தன் அவர்கனளுடைய சேவையைப் பாராட்டியும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் நானிலம் கலைஞர் வட்டத்தின் கலைஞர்களுக்கு சின்னங்கள் வழிங்கி பாராட்டி கௌரவிப்பும் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது கல்வி நிலையத்தால் தரம் 11 மாணவர்களுக்கான புவியியல் ஆசான் எனும் நூலும், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான இரண்டு நூல்களும் அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்விலே அதிதிகளுடன், கல்வி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.