உயர்தரமாணவர்களுக்கான புவியியல் புத்தக வெளியீடு

சித்தாண்டி – மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் மானிடப்பு புவியியலின் சில பகுதிகளை உள்ளடக்கிய தொடர்பாடல் புவியியல் எனும் நூல் இன்று (10.08.2014) வெளியிடப்பட்டது. 


கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக சித்தாண்டி மாவடிவெம்பு நலன்பரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஆசிரியாகளாக திரு சி.கமலநாதன், திருமதி வதனி கமலநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் கல்வி நிலைய நிருவாகத்தினர், மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது இடம்பெற்ற தரம் 11 மற்றும் சில சிறுவர்களின் முயற்சியால் உருவான பாட்டியம்மா என்ற நாடகம் பார்ப்பவர்களின் மனதில் ஆச்சரியத்தையும் அதேவேளை சமூக ரீதியிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post