சித்தாண்டி
– மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி
நிலையமானது கடந்த 18.04.2013 – 21.04.2013 வரையிலான நான்கு நாள் கல்விச்
சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன் அவர்களின் திட்டமிடலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றுலாவில் கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.தீபன், தரம் 8 – 13 வரையிலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன் அவர்களின் திட்டமிடலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றுலாவில் கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.தீபன், தரம் 8 – 13 வரையிலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
புவியியல் பாடத்தை பெருமளவில் கற்கைவிடயமாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சுற்றுலாவானது பின்வரும் மாவட்டங்களுக்கூடாக இடம்பெற்றிருந்தது.
1. மட்டக்களப்பு
2. அம்பாறை
3. மொனறாகலை
4. அம்பாந்தோட்டை
5. மாத்தறை
6. இரத்தினபுரி
7. நுவரெலியா
8. பதுளை
சுற்றுலாவின் போது பல அம்சங்கள் பார்வையிடப்பட்டபோதும், பின்வரும் அம்சங்களை அவற்றில் குறிப்பிடலாம்.
1. கல்லடி பாலம்
2. பனிக்கட்டி தொழிற்சாலை
3. தாழங்குடா தேசிய கல்விக் கல்லலூரி
4. ஒலுவில் சிறிய துறைமுகம்
5. பொத்துவில் சுற்றுலா பிரதேசம்
6. மத்தள விமான நிலையம்
7. அம்பாந்தோட்டை துறைமுகம்
8. தங்காலை தொம்போலா நிலவுருவம்
9. குடாவெல்ல ஊhதுதுளை நிலவுருவம்
10. குடாவெல்ல கடற்கரை நிலவுருவங்கள்
11. தேவன் நீர்வீழ்ச்சி
12. சென்கிளயர்ஸ் நீர்வீழ்ச்சி
13. கொத்மலை நீர்த்தேக்கம்
14. ஆற்றின் அம்சங்கள்
15. வெலிமடை விரைவோட்டவாற்றுப் பகுதி
16. வெலிமடை மேட்டுநிலம்
17. இறப்பர் தொழிற்சாலை
18. இப்பர் தோட்டம்
19. தேயிலைத் தோட்டம்
20. எண்ணெய்தாவர தோட்டம்
21. கறுவாத் தோட்டம்
22. துன்கிந்தை நீர்வீழ்ச்சி
23. நிலச்சரிவு பிரதேசங்கள்
24. வேறுபட்;ட காடுகள்
25. புல்வெளிகள்
26. சங்கமன் கந்த முனை
27. பயிர்ச்செய்கை முறைகள்
28. தரைத்தோற்ற வேறுபாடுகள்
29. நகர அம்சங்கள்
30. குடியிருப்பு பாங்குகள்
சுற்றுலாவின் போது மாணவர்கள் அம்சங்களை அவதானித்து வருவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், தலைமை ஆசிரியரினால் பேருந்தினுள்ளும், களத்திலும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.