தவசி லேணிங் சிற்றியானது முதன்முறையாக 01.04.02012 அன்று கணிதவினாவிடைப்போட்டி நிகழ்வொனறினை நடாத்தியிருந்தது. இநநிகழ்வினை தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் அக்சயன் தலைமையேற்று நடாத்தியதுடன், கல்விநிலையத்தின் கணித வினாவிடை ஏற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில், கல்வி நிலையத்தின் சமூக இணைப்பாளர் மா.பரசுராமன், கல்விநிலையத்தின் உதவி - சமூக இணைப்பாளர் சி.திருப்பதி அவர்களும் மத்தியஸ்தராக கல்வி நிலைய தலைமை ஆசிரியரும் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில் தரம் 9, 10, 11ஆகிய ஒவ்வொரு வகுப்புக்களிலும் உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு இரண்டு இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணி சோழன் அணி எனவும் மற்றய அணி பாண்டியன் அணி எனவும் பெயர்சூட்டப்பட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.. இவ்வினாவிடை நிகழ்வுகளில் ஒவ்வொரு வகுப்புக்களிலும், சோழன் அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. வினாவிடைப் போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கும், தனிநபர் திறமை காட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் தோல்வியைத் தழுவிய அணியினருக்கு ஆறுதல் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன், எதிர்காலத்தில் கல்விநிலையத்தில் கல்விகற்கின்ற மாணவாகள் எவ்வாறு தமது கற்றலை மேலும் வளர்த்துக்கொள்ளலாம் போன்ற ஆலோசனைகளும் அவர்களால் வழங்கப்பட்டது.