வருடாந்த கல்விச் சுற்றுலா - 2010

தவசி லேணிங் சிற்றியானது 2010 ஆம் ஆண்டிற்குரிய கல்விச் சுற்றுலா ஒன்றினை 21.04.2010 அன்று ஒழுங்குபடுத்தியிருந்தது.  இச்சுற்றுலாவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பயிர்ச்செய்கை விளைநிலங்களையும் வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்புக்களையும், சிறு சிறு குன்றுகளையும் கொண்ட குடும்பிமலைப் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
இச்சுற்றுலாவில் மாதுறுஓயாவின் கிளைநதி பாய்ந்து செல்லும் புலிபாய்ந்தகல் பாலம், பேரில்லாவெளி, தரவைக்குளம், ஆத்திக்காட்டு குளம், மியான்கல் ஆறு, குடும்பிமலை முதலியன பார்வையிடப்பட்டன.









Previous Post Next Post